Home /News /education /

BYJU’s Young Genius யின் இந்த எப்பிசோடில் முக்கியமாக சோலார் பவர் மற்றும் சிதார் ப்ரோவெஸின் முக்கிய அம்சங்கள்

BYJU’s Young Genius யின் இந்த எப்பிசோடில் முக்கியமாக சோலார் பவர் மற்றும் சிதார் ப்ரோவெஸின் முக்கிய அம்சங்கள்

Byjus Episode

Byjus Episode

BYJU’s Young Genius | தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த 15 வயது வினிஷா உமாசங்கர் இந்த எப்பிசோடில் காட்சிப்படுத்தப்படும் முதல் இளம் மேதையாவார். வினிஷா விருது பெற்ற கண்டுபிடிப்பாளராகவும் சுற்றுச்சூழல் கண்டுபிடிப்பாளராகவும் அறியப்படுகிறார். சோலார் அயர்ன் கார்ட் என்பது துணியை இஸ்த்ரி செய்யப் பயன்படுத்தப்படும் இரும்பில் உள்ள கரியின் தேவையை சோலார் மூலம் மாற்றுவது ஆகும்.

மேலும் படிக்கவும் ...
நாம் வளர்ந்து வரும் காலகட்டங்களில் மிகச் சில விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். எலிப் பந்தயத்தில் மாட்டிக் கொண்டோம் என்பதால், எல்லோரையும் விடப் பின்தங்காமல் இருப்பதற்காக, நம்மில் பெரும்பாலானோர் உண்மையில் நமக்குப் பிடிக்கும் அல்லது நாம் செய்ய விரும்பும் விஷயங்களைப் பற்றி சிந்திப்பதில்லை.

அதனால்தான் #BYJUSYoungGenius சீசன் 2 இன் ஒவ்வொரு எப்பிசோடில் காட்சிப்படுத்தப்படும் சாதனைகளும் நம்மைத் திகைக்க வைக்கின்றன. நம் நாட்டைச் சேர்ந்த மேலும் இரண்டு இளம் மேதைகள் தங்களின் திறமையையும் வலிமையையும் வெளிக்காட்டி நம்மைக் கட்டிப்போடுவதில் இந்த வாரமும் அதற்கு விதிவிலக்கல்ல.

காலநிலை மாற்றத்தை இரும்பு கரம் கொண்டு எதிர்ப்போம் 

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த 15 வயது வினிஷா உமாசங்கர் இந்த எப்பிசோடில் காட்சிப்படுத்தப்படும் முதல் இளம் மேதையாவார். வினிஷா விருது பெற்ற கண்டுபிடிப்பாளராகவும் சுற்றுச்சூழல் கண்டுபிடிப்பாளராகவும் அறியப்படுகிறார். சோலார் அயர்ன் கார்ட் என்பது துணியை இஸ்த்ரி செய்யப் பயன்படுத்தப்படும் இரும்பில் உள்ள கரியின் தேவையை சோலார் மூலம் மாற்றுவது ஆகும். அவரது கண்டுபிடிப்பு கரி எரிப்பதில் இருந்து சுற்றுச்சூழலை மட்டும் காப்பாற்றவில்லை, நீண்ட காலத்திற்கான நீண்ட கால அயர்னிங் போர்டுடன், துணிகளை இஸ்த்ரி செய்பவர்களுக்கும் அதிக லாபம் ஈட்டக்கூடிய அளவில் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.

மொபைல் அயர்னிங் கார்ட்டில்  ஒரு பைசைக்கிள் இணைக்கப்பட்டுள்ளது, எனவே அவர்கள் முழு கார்ட்டையும் கையால் இழுக்க வேண்டியதில்லை. இந்த கார்ட் சோலார் பேனல்களைப் பயன்படுத்தி ஸ்டீம் அயர்ன் பாக்ஸுக்கு சக்தியூட்டுகிறது, இதனால் இதை ஐந்து மணி நேரத்தில் சார்ஜ் செய்து, ஆறு மணி நேரம் வரை இந்த சார்ஜ் அளவைப் பயன்படுத்தி துணிகளை இஸ்திரி செய்யலாம். வினிஷா தற்போது துணிகளை இஸ்திரி செய்யும் போது கான்டக்ட் சர்ஃபேஸை மிகவும் திறன் வாய்ந்ததாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இது மட்டுமல்லாமல், 2021 ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற COP 26 உச்சிமாநாட்டில் பேசுமாறு அவர் அழைக்கப்பட்டார், அங்கு சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கான அவரது உத்வேகமான பேச்சு முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உட்பட அவரது ரசிகர்களைக் கவர்ந்தது. எப்பிசோடில் அவர் தனது உரையின் ஒரு பகுதியைப் படிக்கும்போது, சிறப்பு விருந்தினரான ரவி சாஸ்திரி திகைப்புடன் அவரைப் பார்வையிட்டதோடு அவரின் நம்பிக்கையை பாராட்டினார்.

அவரது சுற்றுச்சூழல் புதுமைகள் மட்டுமே பிரபலமடைந்து வருகின்றன, மேலும் பெருமையுடன் இந்தியக் கொடி வரையப்பட்ட அவரது மொபைல் அயர்ன் கார்ட் விரைவில் புதிய உயரங்களைத் தொடும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

சித்தார் மூலம் ஸ்ட்ரிங்கிங் ஹார்ட்ஸ் – 

13 வயதான ஆதிராஜ் சௌத்ரி, பத்மபூஷன் விருது பெற்ற தனது தாத்தாவான மறைந்த பண்டிட் டெபு சௌத்ரியின் மடியில் சிறு பையனாக அமர்ந்திருந்தபோதே, ​​பழம்பெரும் சித்தார் இசைக்கலைஞர் அந்த சிறுவனுக்கு இசை நாண்களை இசைத்துக் காட்டினார். பின்னர், ஆதிராஜ் தனது தந்தையான மறைந்த பண்டிட் பிரதீக் சவுத்ரியிடம் சித்தார் வாசிக்க கற்றுக்கொண்டார்.

தனது குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த சித்தார் மேஸ்ட்ரோவானா இவர் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் செனியா கரானாவைச் சேர்ந்தவர். அவர்களின் கரானா, 17 ஃப்ரீட்கள் கொண்ட சித்தாரில் நிபுணத்துவம் பெற்ற இந்தியாவின் ஒரே பாரம்பரிய கரானா ஆகும், இந்த இளம் மேதை ரவி சாஸ்திரி மற்றும் ஆனந்த் நரசிம்மன் ஆகியோர் முன்னிலையில் ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 600 நாண்களை வாசித்து அவர்கைளை ஆச்சர்யப்படுத்தினார்!

கிராமி விருது பெற்றவர்களான பண்டிட் சந்தீப் தாஸ் (தப்லா மேஸ்ட்ரோ) மற்றும் பண்டிட் விஸ்வ மோகன் பட் (மோகன் வீணா வடக்) ஆகிய துறை வல்லுனர்கள் மூலம் இந்த இளம் சித்தார் கலைஞர் மிகவும் பரிந்துரைக்கப்பட்டார், 2020 ஆம் ஆண்டில் தாரானா கலை மற்றும் இசை மூலம் 'பால் பிரதிபா விருது' போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். 2019 இல் இந்திய அரசாங்கத்திடமிருந்து கலாச்சார திறமை தேடல் உதவித்தொகையை (CCRT) பெற்றார், மேலும் 2020 இல் உஸ்தாத் முஷ்டாக் அலி கான் கலாச்சார மையத்தால் புதுதில்லியில் நடைபெற்ற UMAK விழாவில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆறு வயதில் பயிற்சியைத் தொடங்கிய ஆதிராஜ் தனது பயிற்சியை நிறுத்தவில்லை. அவரது தந்தை மற்றும் தாத்தாவின் பிரபலமான பாரம்பரியத்தைத் தொடர அவரது உறுதியும் நம்பிக்கையும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது, குறிப்பாக அவர் எப்பிசோடில் தனது திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு சிறிய தொகுப்பை இசைத்த பிறகு.

வினிஷா மற்றும் ஆதிராஜ் போன்ற இளம் மேதைகளைப் பார்த்து சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒருவர் ஆதிராஜ் போன்று இயன்ற அளவிற்கு இளமையாகவும் வரும் தலைமுறையினருக்கு உத்வேகமாகவும், அதேசமயம்  பழைய தலைமுறையினரைப் பெருமைப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும் மற்றும் வினிஷா தனது சொந்த உணர்வுகள் மற்றும் சிந்தனை செயல்முறைகள் பற்றி சுயபரிசோதனை செய்து, கிரகத்தை காப்பாற்றுவது பற்றி தனது தீவிரமான மற்றும் உறுதியான பேச்சால் உலகிற்கு உணர்த்தியதைப் போல் நாமும் ஏதேனும் ஒன்றைச் சாதிக்க விரும்ப வேண்டும்.

மொத்தத்தில், நீங்கள் தவற விடாமல் பார்க்க வேண்டிய எப்பிசோட் இது.

முழு எப்பிசோடையும் இங்கே காணுங்கள். 
Published by:Selvi M
First published:

Tags: BYJU'S Young Genius, Education

அடுத்த செய்தி