• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • #CBSE10thResults: ஸ்மிருதி இராணியின் மகள் 82% மதிப்பெண் பெற்று தேர்ச்சி!

#CBSE10thResults: ஸ்மிருதி இராணியின் மகள் 82% மதிப்பெண் பெற்று தேர்ச்சி!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.1% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஸ்மிருதி இராணியின் மகள் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 82% சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.

    நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. அதில் 27 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து தேர்வு முடிவுகள் இன்று சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியானது.

    மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘என்னுடைய மகள் 82% மதிப்பெண் எடுத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள்.’ என்று பதிவிட்டுள்ளார்



    சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.1% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வை எழுதியவர்களில் 86.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in  இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: