பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகரித்து இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் கலந்தாய்வு 2 கட்டங்கள் முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட கலந்தாய்வு வருகிற 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, இந்தாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் காலியிடங்கள் இருக்காது என தெரிவித்தார். கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் மானவர்களின் சேர்க்கை அதிகமாக இருப்பதாகவும், வருகிற கலந்தாய்வுகளில் மைனிங், பிரிண்டிங் படிப்புகளுக்கான சேர்க்கை அதிகரிக்கும் என கூறினார்.
இதையும் வாசிக்க: பொறியியல் படிப்புகளின் இன்றைய நிலை என்ன?
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே உணவு, ஒரே மொழி என்கிற அடிப்படையில் இந்தியை பிற மாநிலங்கள் மீது திணிக்க பார்ப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: எந்த துறையில் வேலைக்கான வாய்ப்புகள் உள்ளன
திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கட்சியினர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் தன்னைத் தூங்கவிடாமல் செய்வதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், மக்களைப் பற்றி எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பதால் தன்னால் தூங்க முடியவில்லை என முதலமைச்சர் கூறியதாக அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Engineering counselling, Engineering student, Minister Ponmudi, Ponmudi