Home /News /education /

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் மூடல்: பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் மூடல்: பள்ளிக்கல்வித்துறை

தொழிற் பாட கல்வி

தொழிற் பாட கல்வி

Vocational Courses |   தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பதினோராம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தற்போது முதற்கட்டமாக மூடப்படும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அரசு பள்ளிகளில் டெய்லரிங், பியூட்டிஷியன்,  வேளாண்மை பொறியியல், பொது இயந்திரவியல், மின் சாதனங்கள் பழுது பார்த்தல், ஆடை வடிவமைத்தல் உள்ளிட்ட பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றன

    கடந்த மே 31ம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நடப்பு கல்வியாண்டில் 9,10 ம் வகுப்புகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் மூடப்படுவதாக செய்தி வெளியாகியிருந்தது.  தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பதினோராம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தற்போது முதற்கட்டமாக மூடப்படும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

    இதையும் வாசிக்கஉயர்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்களின் மொத்தச் செலவினை அரசே ஏற்கும் : அரசாணை வெளியீடு

    தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள நான் முதல்வன் திட்டம் மாணவர்களிடையே தொழிற்கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் தொழிற் கல்வி பாடப்பிரிவுகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது முரண்பாடாக அமைந்துள்ளது.

     இதையும் வாசிக்க:  'நான் முதல்வன்' இணையதளத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

    தொழில் பிரிவுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை, பணியாற்றி வரும் ஆசிரியர் ஓய்வு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு வருகிறது.
    ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் குறைந்த அளவிலே மாணவர் சேர்க்கை உள்ள தொழிற் பாடப் பிரிவுகளை மூடுவதற்கு பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக தகவலையடுத்து மூடப்படுகின்றன
    Published by:Salanraj R
    First published:

    Tags: Government school, Govt School

    அடுத்த செய்தி