இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்.21-ஆம் தேதி தொடங்கும்: பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு..

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில், இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்குகிறது.

இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்.21-ஆம் தேதி தொடங்கும்: பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு..
(கோப்பு படம்)
  • Share this:
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு, வருகிற 21-ஆம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது.

எழுத்து தேர்வு முடிந்த பிறகு செய்முறை மற்றும் நேர்முக தேர்வுகள் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் பாரதியார் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.மேலும் படிக்க...கொரோனாவால் கல்வியில் 6 மாத பின்னடைவு இருக்கும் - பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்


கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்வியில் 6 மாதகாலம் பின்னடைவு இருக்கும் எனவும் மாணவர்களுக்கு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவ வேண்டிய நேரம் இது எனவும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.காளிராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading