மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் 45 பள்ளிகளில் மட்டுமே ஒரு மாணவர் கூட சேராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளில் மீண்டும் 6 மாதத்திற்கு பின்னர் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

news18
Updated: July 18, 2019, 12:53 PM IST
மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் விளக்கம்
அமைச்சர் செங்கோட்டையன்
news18
Updated: July 18, 2019, 12:53 PM IST
மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 1248 பள்ளிகளை மூடிவிட்டு, அங்கு நூலகம் அமைக்க உள்ளதாக வெளியான தகவலை சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற முடிவை அரசு எடுத்தால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும். எனவே பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.


இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 1248 பள்ளிகளை அரசு மூடுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 45 பள்ளிகளில் மட்டுமே ஒரு மாணவர் கூட சேராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளில் மீண்டும் 6 மாதத்திற்கு பின்னர் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறும்.

அப்போது மாணவர்கள் மீண்டும் சேரும்போது பள்ளிகள் செயல்படும் என்றும் அதுவரை அங்கு தற்காலிகமாக நூலகங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

Loading...

இந்த 45 பள்ளிகளில் பணியாற்றிய 2 ஆசிரியர்கள் அருகிலுள்ள பள்ளிகளில் பணியாற்ற நியமிக்கப்படுவார்கள் என்றும், இதனால் ஈராசிரியர் பள்ளிகள் 4 ஆசிரியர்களுடன் சிறப்பாக செயல்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.

எனவே எந்த பள்ளிகளையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Also see...

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...