Home /News /education /

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்... தமிழக அரசின் முடிவு சரியா? கல்வியாளர்கள் கருத்து

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்... தமிழக அரசின் முடிவு சரியா? கல்வியாளர்கள் கருத்து

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கல்லூரி இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்துள்ள தமிழக அரசின் முடிவு சரியானதா கல்வியாளர்கள் பேராசிரியர்களின் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரொனோ தொற்று தினசரி அதிகரித்து வரும் நிலையில் நேரடியாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத நிலை உள்ளதால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கொரொனோ தொற்று குறைந்ததையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனிடையே தற்போது ஒமைக்ரான் பரவலால் நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

அரசின் முடிவை வரவேற்கும் பேராசியர்கள் கல்லூரி முதல்வர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகள் பேராசிரியர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் என என அனைவரிடத்திலும் கருத்துகளை கேட்டு தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். கொரொனோ தொற்று குறைந்த பிறகு நேரடியாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என காத்திருந்தால் உயர்கல்விக்காக முதுகலை படிப்புகளில் சேர கூடிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற கருத்தை முன்வைக்கின்றனர்.

Also Read : தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் - தனியார் பள்ளிகள் கோரிக்கை

அரசின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும் கல்வியாளர்கள் வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று ஆன்லைன் கல்விக்குரிய தொழில்நுட்ப வசதிகளை தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்படுத்த தவறிவிட்டதாக தெரிவிக்கின்றனர்..

மேலும் தற்போதைய நோய் பரவும் காலகட்டத்தில் தமிழக அரசு ஆன்-லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தினாலும் அதனை மாணவர்கள் வெறும் கண்துடைப்பாகவே கருதி தேர்வுகளில் பங்கேற்பார்கள் என்கிற கருத்தையும்
முன்வைக்கின்றனர்.

தற்போதைய கொரொனோ காலகட்டத்தில் நடைபெற்று வரும் ஆன்லைன் வழி தேர்வுகளால் மாணவர்களின் திறன் முழுவதும் வெளிப்படுவது கேள்விக்குறியாகியுள்ள நிலையில்
வேலை தேடிச் செல்லும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்குமா என்பதும் வரக்கூடிய காலங்களில் வெளிப்படும்.
Published by:Vijay R
First published:

Tags: Exam, TN Govt

அடுத்த செய்தி