ஹோம் /நியூஸ் /கல்வி /

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 21 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 21 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வுகள், வரும் 21ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் நடந்தது.  சில தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது.

  கடந்த தேர்வுகளை போன்ற நடப்பு செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என்ற  கோரிக்கை மாணவர்களின் மத்தியில் எழுந்தது. இதனை ஏற்க மறுத்த உயர்கல்வித்துறை, நேரடி முறையிலேயே தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்தது.

  அதன்படி ஆன்லைன் தேர்வுக்கு தயாராகும் விதமாக அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு தேதி தற்போது மாற்றம் செய்து புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி தொடங்கி, மார்ச் 2ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Must Read : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி

  பி.இ, பி.டெக், பி.ஆர்க், மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்,ஆர்க்,, முழு நேர, பகுதி நேர மாணவர்களுக்கு அந்தந்த பாடப் பரிவுகளுக்கு ஏற்றவாறு அட்டவணை வெளியிடப்படள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Anna University, BE students, Education, Students