கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
மேலும் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சமூக இடைவெளியுடன் எவ்வாறு பாடங்கள் நடத்தலாம் என்று ஆய்வு நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தான் முன்னுரிமை என்று கூறியுள்ள ரமேஷ் போக்ரியா பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.