தமிழகத்தில் ஜூன் 3வது வாரம் பள்ளிகள் திறப்பு? 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு குழப்பம் அளிக்கிறதா?

மாதிரி படம்

11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவில் தெளிவில்லாத தகவல்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 • Share this:
  பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ஜூன் மூன்றாவது வாரத்தில் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான வகுப்புகளை துவக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கொரோனோ பெருந்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஜூன் மூன்றாவது வாரத்தில் பதினொன்றாம் வகுப்பிற்கு நேரடியாக வகுப்புகளை துவக்க வேண்டுமா அல்லது ஆன்லைன் வழியில் வகுப்புகளை துவக்க வேண்டுமா என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

  மேலும் குறிப்பிட்ட பாடப் பிரிவிற்கு பதினோராம் வகுப்பில் சேர அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் முந்தைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 கேள்விகளுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து பதிலளிக்க கூடிய வகையில் நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

  தனியார் பள்ளிகளில் சேர வசதியில்லாத மாணவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளிகளை நாடி வருவது வழக்கம். இதுபோன்றதொரு சூழ்நிலையில் அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு வைப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

  மேலும் படிக்க...Petrol Diesel Prices | தமிழகத்தில் புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. எவ்வளவு தெரியுமா?

  அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை தாண்டி கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் அளவிற்கு கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம் என்ற அரசு உத்தரவு ஏற்கனவே இருக்கும் நிலையில் கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்களை சேர்க்க நுழைவுத்தேர்வு என்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: