வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்: செப்.1 முதல் தமிழக பள்ளிகளில் புதிய விதிமுறைகள்!

பள்ளி மாணவிகள்

பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் பள்ளிகளில் 9, 10, 11, 12ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    • அதன்படி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும்.

      • வகுப்பில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

      • வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் நடைபெறும்.

      • மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம்.

      • அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

      • ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

      • பள்ளி வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோல சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கிருமிநாசினி வழங்கப்படும்.




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    • அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி பாட்டில்களை வைத்திருக்க வேண்டும்.

    • மாணவர்கள் பள்ளி வளாகங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    • பள்ளி நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனி வாயில்கள் பின்பற்றப்பட வேண்டும்.

    • மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்ந்து உண்ண கூடாது. அதேபோல குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவர்கள் அமரக்கூடாது.

    • பள்ளி வளாகங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காலை நேர வழிபாட்டு கூட்டங்கள் ஆகியவை நடத்தப்படுதல் கூடாது.

    • பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வளாகங்கள் வகுப்பறைகளில் உள்ள மேசை நாற்காலி மற்றும் பள்ளி வளாகங்கள் முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    Published by:Esakki Raja
    First published: