Home /News /education /

நீண்ட நாட்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு: மொழி, வாசிப்பு திறனை மறந்த மாணவர்கள்!

நீண்ட நாட்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு: மொழி, வாசிப்பு திறனை மறந்த மாணவர்கள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குழந்தைகளின் தலையில் பல விசயங்கள் உள்ளது. ஆனால், அவற்றை  காகிதத்தில் எழுதுவது என்பது அவர்களுக்கு கடினமாக உள்ளது. அவர்கள் பாடங்களை மறந்தால் பரவாயில்லை, அதனுடன் அடிப்படை  மொழி தொடர்பு திறனையும் இழந்துவிட்டனர்.

  இந்தியாவில் கொரொனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும்  பள்ளி, கல்லூரி ஆகிய கல்வி நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில், மூன்றில் ஒரு குழந்தை வாசிப்பு திறன், மொழித் திறன் ஆகியவற்றை மறந்துள்ளதாக அதிர்ச்சி  தகவல் வெளியாகியுள்ளது.

  இந்தியாவில் 2020ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பரவல் குறையத் தொடங்கியதையடுத்து மத்திய அரசின் பொது ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டு மாநிலங்களுக்கு தங்களுக்கு ஊரடங்கு பிறப்பித்துகொண்டன.  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

  எனினும் குழந்தைகளுக்கான கல்வி நிலையங்கள் சுமார் 2 ஆண்டுகளாக திறக்கப்படாமலேயே இருந்து வந்தது. தற்போது 2வது அலை குறையத் தொடங்கியதை தொடர்ந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் கல்வி நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கியது. கொரோனா தடுப்பு வழிக்காட்டி நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி,கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

  வாசிப்பை மறந்த குழந்தைகள்:

  கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி பயின்று வந்ததால் பெரும்பாலான குழந்தைகளுக்கு மொழித் திறன், வாசிப்பு திறன் ஆகியவை மறந்துபோயுள்ளன. பெரும்பாலான குழந்தைகள் தங்கள் தாய் மொழிக்கு திரும்பியுள்ளனர், ”என்று குழந்தை உரிமை அறக்கட்டளையின் இயக்குனர் நாகசிம்ஹா ஜி ராவ் கூறியுள்ளார்.

  மாதிரிப் படம்


  இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “குழந்தைகளின் தாய்மொழி எதுவாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் பள்ளிகளில் ஒரு பொதுவான மொழியில் உரையாடுவார்கள். சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளாகக் கூட  அது இருக்கலாம்.  ஆனால், குடும்பங்களுடன்  சேர்ந்து இருந்தது, வீடுகளில்  போதிய கல்வி இல்லாதது போன்றவை காரணமாக பொது தொடர்பில் இருந்து அவர்கள் வெகு தூரம் விலகி சென்றுள்ளனர். கொரோனா தொற்றின் பெரும்பகுதியை வீட்டிலேயே  கழித்த இளம் குழந்தைகளிடம் இது தெளிவாக காணப்படுகிறது” என்று அவர் கூறுகிறார்.

  5வது வகுப்பு பயிலும் 3ல் ஒரு குழந்தைக்கு 2வது வகுப்பு பாடப் புத்தகங்களை கூட சரளமாக வாசிக்க தெரியவில்லை, அவர்களால் எழுத்துக்கள், எண்கள், கூட்டல் மற்றும் கழித்தல் போன்ற அடிப்படை கணிதங்களை நினைவுக் கூர முடியவில்லை.  இதற்கெல்லாம் மேலாக தங்களது நண்பர்களுடன் கூட அவர்களால் உரையாட முடிவதில்லை. 

  மேலும் படிக்க: பள்ளி புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை: நீதிமன்றம் உத்தரவு!


  எளிமையான வார்த்தைகளை எழுதுவதற்கான தன்னம்பிக்கையை அவர்கள் இழந்துள்ளதாக வேதனையுடன் குறிப்பிடுகிறார் கர்நாடகாவின் சிக்கமங்களூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை கமலா ஸ்ரீ. “ எங்கள் மாணவர்களின் இல்லங்களுக்கு நாங்கள் சென்று அவர்களை பள்ளிக்கு வர ஊக்குவித்தோம். அவர்களும் மகிழ்ச்சியுடன் திரும்பினர். ஆனால், இத்தனை நாட்களாக வீட்டில் என்ன செய்திகொண்டிருந்தார்கள் என்று எழுத சொன்னதும் பென்சிலை பிடித்ததுமே அவர்களின் மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது.  அவர்களின் தலையில் பல விசயங்கள் உள்ளது. ஆனால், அவற்றை  காகிதத்தில் எழுதுவது என்பது அவர்களுக்கு கடினமாக உள்ளது. அவர்கள் பாடங்களை மறந்தால் பரவாயில்லை, அதனுடன் அடிப்படை  மொழி தொடர்பு திறனையும் இழந்துவிட்டனர்” என்று அவர் கூறுகிறர்.

  இதையும் படிக்க: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று: பொது சுகாதாரத்துறை இயக்குநரின் உத்தரவு


  ஆன்லைன் வகுப்ப்கள்,  சமூக ஊடக கலந்துரையாடல்கள் போன்றவை இல்லாததால் இந்த இழப்பு கிராமப்புற மாணவர்களிடம் அதிகமாக உள்ளதாக நாகசிம்ஹா ஜி ராவ் குறிப்பிடுகிறார். “நண்பர்களுடன் விளையாடும் போது, குழந்தைகள் பேசுகிறார்கள். இது ஒரு பெரிய தகவல் தொடர்பு பயிற்சி. ஆனால், குழு விளையாட்டுக்கள் நடைபெறாததால் இந்த அறிவை குழந்தைகள் இழந்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தற்போது இத்தகைய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக தன்னார்வளர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும், குழந்தைகள் தன்னம்பிக்கையுடன்  பேச தொடங்கிவிட்டால் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  “ குழந்தைகள் தங்கள் பழைய நண்பர்களுடன் புதிதாக நட்பு கொள்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் எதில் சிறப்பாக இருந்தார்களே  அதை கற்கின்றனர். நண்பர்களுடன் சிறு சிறு சண்டைகள் போடுகின்றனர். கேள்வி கேட்க கற்றுவருகின்றனர். இது அவர்களுக்கு எப்போது உதவும் என்பது எங்களுக்கு தெரியவில்லை” என்று குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் தன்னார்வலரான கீர்த்தனா சர்மா தெரிவித்தார்.

   
  Published by:Murugesh M
  First published:

  Tags: Corona, Kids, School

  அடுத்த செய்தி