Home /News /education /

17 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

17 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

17 மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களின் மனங்களை மகிழ வைக்க 10 முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, வரைதல், அனுபவம் பகிர்தல் போன்றவற்றை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    17 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி, பள்ளிகளுக்கான கற்பித்தல் வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

    அதில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள், புத்தாக்க பயிற்சிக் கட்டகங்கள் ஆகியவை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, 17 மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களின் மனங்களை மகிழ வைக்க 10 முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, வரைதல், அனுபவம் பகிர்தல் போன்றவற்றை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அடுத்த 45 முதல் 50 நாட்களுக்கு புத்தாக்க பயிற்சிக் கட்டகங்களை நடைமுறைப்படுத்தலாம். உதாரணமாக 7-ம் வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு 6-ம் வகுப்பின் அடிப்படை பாடங்களை இந்த காலகட்டத்தில் கற்றுத்தரப்படும்.

    மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப இந்த கால அளவை நீட்டிப்பது குறித்து ஆசிரியர்களே முடிவு செய்யலாம். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    பள்ளிகள் திறக்கும் முன்பே இந்த வழிகாட்டு நெறிமுறைகள் ஆசிரியர்களுக்கு சென்றடைவதை தலைமை ஆசிரியர்கள் உறுதிபடுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், 50 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும் என்றும், சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் முதல் நாள் வரக்கூடிய மாணவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. முழுநாளும் வகுப்பு நடைபெறும்.

    பள்ளிக்கு மாணவர்கள் வரவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவர். மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Minister Anbil Mahesh, Tn schools

    அடுத்த செய்தி