ஹோம் /நியூஸ் /கல்வி /

தீபாவளி பண்டிகையை ஒட்டி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை ஒட்டி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

பள்ளி விடுமுறை அறிவிப்பு

பள்ளி விடுமுறை அறிவிப்பு

விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19 அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தீபாவளி பண்டிகையையொட்டி பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், அவர்களை கருத்தில் கொண்டு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் தீபாவளியை கொண்டாட பலரும் சென்னை இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். நாளை வேலை நாள் என்பதால் சொந்த ஊர்களில் இருந்து உடனடியாக திரும்புவது பலருக்கும் கடினமாக இருக்கும் என்றும் எனவே, நாளையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் பலரும் அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தனர்.

    இந்நிலையில், நாளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக அக்டோபர் 25ம் தேதி ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இதையெல்லாம் பண்ணாதிங்க.. தீபாவளிக்கு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?

    மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19 அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    Published by:Murugesh M
    First published:

    Tags: College, Deepavali, School Leave