Home /News /education /

ஆன்லைன் மூலம் படிப்பதை விட பள்ளிகளில் நேரடியாக வந்து படிப்பதே விருப்பம் - மாணவர்கள்

ஆன்லைன் மூலம் படிப்பதை விட பள்ளிகளில் நேரடியாக வந்து படிப்பதே விருப்பம் - மாணவர்கள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

School Reopen | தமிழகம் முழுவதும் கொரொனா  பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள் துவங்கிய நிலையில் , மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

கொரொனா தொற்று பரவல் காரணமாக கடந்த  டிசம்பர் மாதம்  மூடப்பட்ட பள்ளிகள்  தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் 40 நாட்களுக்கு பின்னர் இன்று தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. 100 சதவீத மாணவர்கள் வருகையுடன் பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 2040 பள்ளிகளில் 574727 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகள் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்தனர்.

கொரானா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கபட்டனர். 15 முதல் 18 வயதுடைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆன்லைன் மூலம் படிப்பதை விட பள்ளிகளில் நேரடியாக வந்து படிப்பதே தங்களுக்கு பிடித்திருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்தனர். கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாகவும், உணவினை பிறருடன் பகிர்ந்து கொள்ள கூடாது என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு  இருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.

Also Read : மருத்துவ படிப்பில் சேரும் விவசாயி மகள்... கல்விச் செலவுக்கு உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை

பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பது தங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கும் பெற்றோர், பள்ளிகளில் பாதுகாப்பு வழிமுறைகளுடன்  வரச் சொல்லி இருப்பதால் கொரொனா  குறித்த அச்சம் இல்லை எனவும் பெற்றோர்  தெரிவிக்கின்றனர்
Published by:Vijay R
First published:

Tags: School open

அடுத்த செய்தி