மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் மாற்றம்..!

 காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரை பொதுத் தேர்வுகள் நடைபெறும்.

மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் மாற்றம்..!
 காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரை பொதுத் தேர்வுகள் நடைபெறும்.
  • News18
  • Last Updated: February 29, 2020, 7:46 AM IST
  • Share this:
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதுவதற்கான நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாணர்வகளின் பயத்தைப் போக்கி தேர்வுக்கு முன்கூட்டியே தயாராக தமிழகக் கல்வி இயக்கம் கடந்த ஆண்டே பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4 ம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 17 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மே மாதம் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுமட்டுமன்றி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதும் நேரத்தை நீட்டிக்க மாணார்கள், பெற்றோர்கள் , ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி இந்த ஆண்டு முதல்  காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரை பொதுத் தேர்வுகள் நடைபெறும். 15 நிமிடம் வினாத்தாளை படிக்கவும், 3 மணி நேரம் தேர்வு எழுதவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
First published: February 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading