ஹோம் /நியூஸ் /கல்வி /

பள்ளி நேரத்தை தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் - பள்ளிக்கல்வித் துறை

பள்ளி நேரத்தை தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் - பள்ளிக்கல்வித் துறை

காட்சிப் படம்

காட்சிப் படம்

2022-23ம் கல்வியாண்டு நாட்காட்டியில் (Academic Calendar) உள்ள நாட்களில், தலா 40 நிமிடங்களுக்கு எட்டு அமர்வுகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  School Reopening:  பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்தந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களுடன் கலந்து ஆலோசித்து பள்ளி திறக்கும்/முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

  முன்னதாக, 2022-23 கல்வியாண்டில், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பின்பற்ற வேண்டிய மாதிரிப் பாடவேலையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

  அதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே வெளியிட்ட 2022-23ம் கல்வியாண்டு நாட்காட்டியில் (Academic Calendar) உள்ள நாட்களில், தலா 40 நிமிடங்களுக்கு எட்டு அமர்வுகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காலம்நிகழ்வுகள்நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்  பள்ளிகள் (நிமிடம் )
  காலை 9.10 மணி முதல்9.30 மணி வரைகாலை வணக்கக் கூட்டம்20 நிமிடம்
  9.30 - 10.10மணி வரைமுதல் பாடவேளை40
  10.10- 10.50 மணி வரைஇரண்டாம் பாடவேளை40
  10.50- 11.00 மணி வரைஇடைவேளை10
  11.00- 11.40 மணி வரைமூன்றாம் பாடவேளை40
  11.40 - 12.20 மணி வரைநான்காம் பாடவேளை40
  12.20 -1 மணி வரை மதிய உணவு இடைவெளி40
  1 - 1.20 மணி வரைசிறார் பருவ இதழ்/நூல் வாசிப்பு/செய்தித் தாள் போன்ற செயல்பாடுகள்20
  1.20 - 2 மணி வரைஐந்தாம் பாடவேளை40
  2  - 2.40 மணி வரைஆறாம் பாடவேளை40
  2.40 - 2.50 மணி வரைஇடைவெளி10
  2.50 - 3.30 மணி வரைஏழாம் பாடவேளை40
  3.30- 4.10 மணி வரைஎட்டாம் பாடவேளை40

  அரசுப் பள்ளிகளில் காலை  9.10 முதல் மாலை 4.10 மணி வரை கற்றல் செயல்பாடுகள் இருக்கும். காலை 9.10- 9.30 மணி வரை காலை வணக்கக் கூட்டம் நடைபெறும்.    தலைமையாசிரியர்/ உதவி தலைமையாசிரியர்  முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இரண்டாவது அமர்வுக்குப் பிறகு காலை  இடைவேளையும், நான்காவது அமர்வுக்குப் பிறகு மதிய உணவு இடைவெளியும் இருக்கும். மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு, சிறார் பருவ இதழ்/நூல் வாசிப்பு/செய்தித் தாள் போன்ற செயல்பாடுகளுக்கு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாலை 4.10 மணியுடன் பள்ளி செயல்பாடுகள் முடிவடைகிறது.

  இதையும் வாசிக்க: Tnusrb Recruitment: காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு

  எவ்வாறாயினும், பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்தந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களுடன் கலந்து ஆலோசித்து பள்ளி திறக்கும்/முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க:  தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு.. மாணவர்கள் திறனை வளர்க்க அசத்தல் அறிவிப்பு

  மேலும், உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திறக்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிந்து, மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒரு நாள் அனுபவப் பகிர்வு, நீதிபோதனை பாடவேளைக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Govt School