தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே, விலையில்லா பாடப்புத்தகங்கள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நேரடி வகுப்புகள் சரிவர நடைபெறாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் 2019ம் ஆண்டுக்கு பின்னர் வழக்கம்போல் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள்திறக்கப்படவுள்ளது. இதையொட்டி பள்ளி வகுப்பறைகள், வளாகங்கள் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் 8 பாடவேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணை பள்ளிக்கல்வித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 2022-23ம் கல்வியாண்டு நாட்காட்டியில் (Academic Calendar) உள்ள நாட்களில், தலா 40 நிமிடங்களுக்கு எட்டு அமர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்தந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களுடன் கலந்து ஆலோசித்து பள்ளி திறக்கும்/முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு.. மாணவர்கள் திறனை வளர்க்க அசத்தல் அறிவிப்பு
உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திறக்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிந்து, மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் திறனை வளர்க்கும் விதத்தில் கல்வி இணை செயல்பாடுகளில் (extra curricular activities) கூடுதல் கவனம் செலுத்துமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இலக்கிய போட்டி, சிறார் திரைப்படங்கள், வெளிநாட்டு கல்வி சுற்றுலா போன்ற பல்வேறு அறிவிப்புகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே விலையில்லா பாட புத்தகங்கள், சீருடை ஆகியவற்றை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 20ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 27ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: School, School Reopen, School students