முகப்பு /செய்தி /கல்வி / 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

பொதுத் தேர்வு முடிவுகள்

பொதுத் தேர்வு முடிவுகள்

Public Exam Result dates announced | 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது முடிவுகள் வெளியாகும் தேதிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

12 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வுகள் மார்ச் 13 முதல் தொடங்கி ஏப்ரல் 3 வரை நடைபெறவுள்ளது. அந்த தேர்வுக்கான முடிவுகள் மே 5 ஆம் நாள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், 11 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 14 ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் மே 19 ஆம் நாள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:

10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை - முழு விவரம்

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை - முழு விவரம்

மேலும் 10 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6 ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கான முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Exam results, Public exams, Tamil nadu board result, Tn schools