• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • புதிய கல்விக் கொள்கை: பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் - மத்திய அரசு..

புதிய கல்விக் கொள்கை: பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் - மத்திய அரசு..

புதிய கல்விக்கொள்கை

புதிய கல்விக்கொள்கை

ஒவ்வொரு மாநில அரசும் யூனியன் பிரதேசங்களும் அனைத்து தரப்பு ஆசிரியர்களின் கருத்துக்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது

  • Share this:
புதிய கல்விக் கொள்கையில், பள்ளிக்கல்வி குறித்த  கருத்துகளை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

புதிய கல்விக்கொள்கை தொடர்பான கருத்தறிதல் அறிவிப்பு


மத்திய கல்வி அமைச்சக செயலாளர் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் இம்மாதம் 24 முதல் 31-ஆம் தேதி வரை கருத்துக்களை  innovateindia.mygov.in/nep2020 என்கிற இணைய பக்கத்தில் பதிவு செய்து கொண்டு அதன் பிறகு  ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 12000 ரத்த மாதிரிகள்.. சென்னையில் 50% பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன்.. ஆய்வு சொல்வது என்ன?

ஆசிரியர்கள் அளிக்கும் கருத்துக்களை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பரிசீலித்து உரிய கருத்துக்களை தெரிவிக்கும் ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநில அரசும் யூனியன் பிரதேசங்களும் அனைத்து தரப்பு ஆசிரியர்களின் கருத்துக்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: