Home /News /education /

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள்தான் காரணம் - தேர்வுத்துறை விளக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள்தான் காரணம் - தேர்வுத்துறை விளக்கம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தான் காரணம் என கல்வித் துறை ஆணையரிடம் தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

    10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 10-ம் தேதி காலை வெளியிடப்பட்டன. இதில் பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் மற்றும் காலாண்டு , அரையாண்டு தேர்வு முற்றிலும் எழுதாத மாணவர்கள், பள்ளிக்கு வராத மாணவர்களுக்கும் சேர்த்து ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்ட விவகாரம் குழப்பத்தை ஏற்ப்படுத்தியது.

    இதையடுத்து பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு எவ்வாறு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது என்பது குறித்து, கல்வித் துறை ஆணையர், தேர்வுத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருந்தார். இதையடுத்து தேர்வுத்துறை விளக்கமளித்துள்ளது.

    இந்த குளறுபடிகளுக்கு காரணம் தலைமை ஆசிரியர்கள்தான் என்றும் அவர்கள் கொடுத்த பட்டியலின் அடிப்படையிலேயே ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன என்றும் கல்வித்துறை ஆணையர் சி.ஜி.தாமஸ் வைத்யனிடம் தேர்வுத்துறை பதிலளித்துவிட்டதாக, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மேலும் படிக்க...8-ஆம் வகுப்பு மாணவி கையைப்பிடித்து இழுத்தவர் போக்சோவில் கைது..

    இதனால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: 10 th exam result, Department of School Education, SSLC

    அடுத்த செய்தி