5,000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் - செங்கோட்டையன் அறிவிப்பு

news18
Updated: June 12, 2018, 11:40 AM IST
5,000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் - செங்கோட்டையன் அறிவிப்பு
அமைச்சர் செங்கோட்டையன்
news18
Updated: June 12, 2018, 11:40 AM IST
5,000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த முடியும் என்று செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, பொதுவாக அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதாகவும் அதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 5,000 மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் மூலம் மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆங்கில மோகத்தால் பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதாகவும், ஆரம்ப பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி தர முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, மொழிப்பாடங்கள் மாணவர்களுக்கு சுமையாக இருப்பதாகவும், அதனை சுவையாக மாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மொழிப்பாடங்களுக்கு இருந்த இரண்டு தாள்களை ஒன்றாக்கி நேற்றைய தினம் அரசாணை வெளியிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பேசினார். இது தொடர்பான கோப்பு முதல்வரிடம் சென்றவுடன், அவர் ஒப்புதல் வழங்கி கையொப்பமிட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.
First published: June 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...