அரசுப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..

அரசுப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..

அமைச்சர் செங்கோட்டையன்

ஊராட்சி , பேருராட்சி பகுதிகளில் விளையாட்டை ஊக்குவிக்க 67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்துசெய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

ஈரோட்டில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊராட்சி , பேருராட்சி பகுதிகளில் விளையாட்டை ஊக்குவிக்க 67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது  எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: புதிய ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..

மேலும் படிக்க: அரியர் மாணவர்களுக்கு டிசம்பர் 21 முதல் சிறப்புத் தேர்வு: சென்னை பல்கலைக்கழகம்

அரையாண்டு தேர்வை பொறுத்தவரை தறியார் பள்ளிகள் மட்டும் ஆன்லைனில் தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இல்லை. பாடத்திட்ட குறைப்பு என்பது 9 ம் வகுப்பு வரை 50 சதவீதமும் , 10 , 11 ,12-ஆம் வகுப்பு 65 சதவீதமும் பாடம் நடத்த வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்
Published by:Gunavathy
First published: