மேல்நிலை வகுப்புகளில் ஒரு மொழிப்பாட தேர்வு விவகாரம் - அமைச்சர் மறுப்பு

தமிழகத்தைப் பொருத்தவரை 6 பாடத் திட்டங்கள் தொடரும் என்றும், இரண்டு மொழிப் பாடங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மேல்நிலை வகுப்புகளில் ஒரு மொழிப்பாட தேர்வு விவகாரம் - அமைச்சர் மறுப்பு
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
  • News18
  • Last Updated: May 11, 2019, 6:46 AM IST
  • Share this:
தமிழகத்தில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்யலாம் என்று வெளியான செய்தியில் உண்மையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 1,200 மதிப்பெண்களுக்கு நடைபெற்று வந்த தேர்வு, பாடச்சுமையை காரணம் காட்டி, 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டது.

கடந்த ஆண்டும், நடப்பாண்டும் 600 மதிப்பெண்களுக்கே தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், அதனையும் 500 மதிப்பெண்ணாக குறைக்க எண்ணியுள்ள பள்ளிக்கல்வித்துறை, ஒரு பாடத்தையே நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.


அதன்படி, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒரு பாடத்தை மட்டும் தேர்ந்தெடுத்துப் படித்தால் போதும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதேபோல, 10-ம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஒன்றாம் தாள், 2-ம் தாள் என நடைபெற்றுவரும் தேர்வை, இனி ஒரே தாளாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், மொழிப்பாடம் தொடர்பான செய்திகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.11 மற்றும் 12-ம் வகுப்புகளில் மொழிப்பாடத்தை தேர்ந்தெடுப்பது தொடர்பாக வெளியான தகவல் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைப் பொருத்தவரை 6 பாடத் திட்டங்கள் தொடரும் என்றும், இரண்டு மொழிப் பாடங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ், ஆங்கிலப் பாடங்களை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும், வேறு மொழிகளைப் பற்றி, கல்வியாளர்கள் மூலம், ஆலோசனைகள் வந்தால் பரிசீலிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

Also see...

First published: May 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்