• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் சிக்கல் - அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் சிக்கல் - அமைச்சர் செங்கோட்டையன்

(கோப்புப் படம்)

(கோப்புப் படம்)

தற்போதைய சூழ்நிலையில் நீண்ட காலத்திற்கு பள்ளி திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

  • Share this:
    ஈரோடு கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அவர் கூறியதாவது, “12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. 35,000 மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் 718 பேர் மட்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு தேர்வு வைத்த பின்னரே முடிவு வெளியிடப்படும்.

    மீண்டும் பேருந்து இயங்கினால் மட்டுமே அவர்களுக்கு தேர்வு வைக்க முடியும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூ.248 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...

    பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக்டாக் செயலியும் முடக்கம்

    தற்போதைய சூழ்நிலையில் பள்ளி திறக்க முடியாது. நீண்ட காலமாகும். அனைத்து துறை ஆலோசனைகளை கேட்ட பின்னரே பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: