நீட் தேர்வு - புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ உத்தரவு

அடுத்த ஆண்டு மே 5-ல் நடக்க இருக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவுங்கள் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

நீட் தேர்வு - புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ உத்தரவு
நீட் தேர்வு (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: November 24, 2018, 1:41 PM IST
  • Share this:
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வசதிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செய்து தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவம் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 5-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கு நவம்பர் 30-ம் தேதி கடைசி தேதியாகும்.

இந்நிலையில் இணையதளம் வசதி இல்லாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தக்க ஏற்பாடுகள் செய்து அவர்கள் விண்ணப்பிக்க உதவ வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் (மாதிரி படம்)


குறிப்பாக புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களுக்கு உதவ உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து, உச்சநீதிமன்றம் தேசிய தேர்வு ஆணையத்திற்கு 2019-ம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என்று  உத்தரவு பிறப்பித்துள்ளது.

Also see...
First published: November 24, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்