பள்ளி மாற்றுச்சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டாம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

வருவாய்த்துறை மூலமாக சாதி சான்றிதழ் வழங்கப்படுவதால், மாற்று சான்றிதழில் தனியாக சாதி பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பள்ளி மாற்றுச்சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டாம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: May 15, 2019, 1:32 PM IST
  • Share this:
மாணவர்களின் பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டாம் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 40,000 மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்குகின்றன.

இவை தவிர 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அனைத்து விதமான பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் கல்வி உதவித்தொகை உள்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.


இதனால், ஆரம்ப காலத்தில் மாற்றுச்சான்றிதழில் சாதி குறிப்பிடுவது கட்டாயமாக இருந்தது. அதன் பின் மாணவர்கள் மற்றும் பெற்றோர் விருப்பத்திற்கு விடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மாற்றுச்சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டாம் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மூலமாக சாதி சான்றிதழ் வழங்கப்படுவதால், மாற்று சான்றிதழில் தனியாக சாதி பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Also see...
First published: May 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்