முகப்பு /செய்தி /கல்வி / 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடப் பகுதிகள் குறைப்பு - பள்ளிக் கல்வித்துறை முடிவு

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடப் பகுதிகள் குறைப்பு - பள்ளிக் கல்வித்துறை முடிவு

கோப்பு படம்

கோப்பு படம்

பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

10 ஆம் வகுப்பில், இரண்டு பாட புத்தகங்கள் கொண்ட சமூக அறிவியல்,  ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது.

அதேபோன்று 11 மற்றும் 12-ம் வகுப்பில் இரண்டு பாடப்புத்தங்கள் கொண்ட வணிக கணிதம் ஒரு பாடப்புத்தமாக மாற்றப்பட்டுள்ளது

அதே சமயம்  2  பாடப்புத்தகங்கள் கொண்ட கணிதம் இயற்பியல் , வேதியியல் ஆகிய பாடப் புத்தகங்களைத் தவிர்த்து.. 2 பாட புத்தகங்கள் கொண்ட பாடங்களுக்கான புத்தகங்கள் ஒரு புத்தகமாக  மாற்றப்பட உள்ளது.

முதற்கட்டமாக பாடப்பகுதிகள் குறைக்கப்பட்ட காரணம் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடப் புத்தகங்களில் இடம்பெற்ற பாடப்பகுதிகள் மாணவர்களுக்கு கூடுதல் சுமை அளிப்பதாக பள்ளிக்கல்வித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்தே முதற்கட்டமாக தற்போது பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.

Also read... விமான நிலையத்தில் அனைத்து பயணிகளுக்கும் சோதனை? சர்ச்சையை ஏற்படுத்திய தொற்று எண்ணிக்கை

இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக பாடப் பகுதிகளை பாதியாக குறைக்க பள்ளிக்கல்வித்துறை 18 பேர் கொண்ட குழுவை  அமைத்தது. முதற்கட்டமாக இந்த குழு அளிக்கும் பரீசிலனையின் அடிப்படையில் தற்போது பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டாலும், கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மேலும் பாடப்பகுதிகள் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: School books