Home /News /education /

குழப்பத்தின் உச்சத்தில் பள்ளிக்கல்வித்துறை...? 11, 12-ம் வகுப்பு பாடங்கள் பழைய நடைமுறைப்படி தொடரும் என அறிவிப்பு

குழப்பத்தின் உச்சத்தில் பள்ளிக்கல்வித்துறை...? 11, 12-ம் வகுப்பு பாடங்கள் பழைய நடைமுறைப்படி தொடரும் என அறிவிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

பள்ளிக் கல்வித்துறையில் பல முக்கிய அறிவிப்புகள் அறிவிப்பதும் பின் அதனை பின்வாங்குவதும் என பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அறிவிப்புகளை வெளியிடுவது அதை ரத்து செய்வதும் என குழப்பத்தின் உச்சத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது. அதன் தொடர்சியாக வரும் கல்வியாண்டு முதல் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்ட 500 மதிப்பெண்களுக்கான முறை ரத்து செய்யப்பட்டு பழைய முறைப்படி 4 பாடத்திட்டம் முறையில் 200 மதிப்பெண்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேல்நிலை வகுப்புகளில் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 4 பாட திட்ட முறையை மாற்றி மூன்று பாடத்திட்ட முறையை தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

முன்னதாக 600 மதிப்பெண்களுக்கு இருந்த பாடத்திட்டம் முறை 500 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டது. அதன்படி பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல் வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களுடன் இரண்டு மொழிப் பாடங்களை படித்தால் போதுமானது.

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் கணிதம் தவிர்த்து உயிர் அறிவியல் (பயலாஜி) வேதியியல் இயற்பியல் ஆகிய பாடங்களுடன் மொழிப் பாடங்களை மற்றும் பயின்றால் போதுமானது. இந்த பாத்திட்ட முறைப்படி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அரசின் இந்த முடிவு மாணவர்களின் கல்வி சுதந்திரத்தையும், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிறகு செல்லும் வாய்ப்பை பாதிக்கும் என்கிற விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து இன்று தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அதில் மூன்று பாட திட்ட முறை மாற்றப்பட்டு வரும் கல்வியாண்டில் 4 பாடத்திட்ட முறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இயற்பியல், வேதியியல், கணிதம், உயிர் அறிவியல் மற்றும் மொழிப்பாடங்கள் என 600மதிப்பெண்களுக்கான பழைய முறையே தொடரும்.

Also read... ஆன்லைன் வகுப்புகளுக்கு வருகின்றன புதிய விதிமுறைகள் - மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல்

பள்ளிக் கல்வித்துறையில் பல முக்கிய அறிவிப்புகள் அறிவிப்பதும் பின் அதனை பின்வாங்குவதும் என பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி