பெற்றோர்களே உஷார்! சென்னையில் அங்கீகாரமில்லாத பள்ளிகளின் லிஸ்ட் இதோ..

அங்கீகாரமில்லாத பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை பெற்றோர்கள் முற்றிலும் தவிரக்கப்பட வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

பெற்றோர்களே உஷார்! சென்னையில் அங்கீகாரமில்லாத பள்ளிகளின் லிஸ்ட் இதோ..
கோப்புப் படம்
 • News18
 • Last Updated: May 29, 2019, 8:02 PM IST
 • Share this:
பள்ளிக் கல்வித் துறையின் தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் விவரத்தை சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் பள்ளிக் கல்வி துறையின் தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி சான்றிதழ்கள் தகுதியற்றதாகவும், அரசால் நடத்தப்படும் பொது தேர்வுகள் எழுத இயலாத நிலையும் ஏற்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் (சென்னை புறநகர்) உள்ள பள்ளிக் கல்வி துறையின் தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் விவரம் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


இந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை பெற்றோர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி துறை கேட்டு கொண்டுள்ளது.

மேலும் நோட்டீஸ் வழங்கப்பட்டு பத்திரிகை செய்தி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரமின்றி செயல்படும் பட்சத்தில் அது சார்ந்த பள்ளிகள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகள் விவரம்:

 1. VNR Vivekananda Vidyalaya CBSE School, Gangaiamman Nagar, Maduravoyal, Chennai 95

 2. Narayana E- Techno CBSE School, No,9 Meekakshni Street, Karthikeyan Nagar, Maduvavoyal, Chennai 95

 3. Ravindra Bharathi Global CBSE School, Nerkundram, Chennai 107

 4. Margregories Public CBSE School, Mogappair West, Chennai 37

 5. Sri Chaithanya Techono CBSE School, Ambathur, Athipet, Chennai 58

 6. KC Toshiniwal Vivekananda Vidyalaya CBSE School, Mathur, Chennai 68

 7. Vivekananda Viyalaya CBSE School, A.S.Nagar, Thiruvottiyur, Chennai 19

 8. SMT Mohini Saraogi Vivekananda CBSE School, Jothi Nagar, Thiruvottiyur, Chennai 19

 9. Vellammal New Gen CBSE School, Ward-G, Village Road, Thriuvottiyur, Chennai 19

 10. SVP  Nursery and Primary school, Thedel Nagar, Perumal Koil Street, Maduravoyal, Chennai 95

 11. SVP Nursery and Primary school, Pellaiyarkoil Street, Mettukuppam, Chennai 107

 12. Janet Nursery and Primary school, Erikkarai Street, Maduravoyal, Chennai 95

 13. SRNM Nursery and Primary school, Anish Nagar, 2 nd Street, Ramapuram, Chennai 89

 14. Kinder Lounge Nursery and Primary school,  Valasaravakkam

 15. Kinder Lounge Nursery and Primary school,  Nolambur.

 16. Lamech Nursery and Primary school. Kaikkankuppam, Valasaravakkam.

 17. Divyam  Nursery and Primary school. Mogappair East .

 18. Jayavel Nursery and Primary school, Athipet, Ambathur, Chennai 53

 19. Acharya Nursery and Primary school, Janaki Nagar, Valasaravakkam.

 20. Acharya Nursery and Primary school, Thiru Nagar, Valasaravakkam.

 21. Acharya Nursery and Primary school, R K Nagar, Valasaravakkam.

 22. Emmanuvel Nursery and Primary school, Surapet Main Road, Vinayagapuram, Chennai 99

 23. St Johns Nursery and Primary school, Puzhal.

 24. Devi Karumariamman Nursery and Primary school, Thiruvottiyur, Chennai 19

 25. Deva Prabaredari Nursery and Primary school, Ennoor.

First published: May 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்