கட்டாயக் கல்விச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசச் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிக் கல்வித்துறை வளாகம்

கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்வது குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

  • Share this:
    இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு, ஜூலை 5-ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று
    பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

    கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் கட்டணம் இல்லாமல் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 8,000-த்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இந்தநிலையில், இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் சேர்வதற்க்கான முழு அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்ட குழந்தைகளுக்கான காரணங்கள் ஆகியவற்றை வெளியிட வேண்டும்.

    25 விழுக்காடு இடங்களை விட, அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டால், ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியலை ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒவ்வொரு பள்ளியிலும் வெளியிட வேண்டும்.

    மாணவர் சேர்க்கை பணிகள் முடிந்ததும், அது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒவ்வொரு பள்ளியும், அதன் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு எட்டாம் வகுப்பு வரையான கல்விச் செலவை மத்திய, மாநில அரசுகள் ஏற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Karthick S
    First published: