தமிழகத்தில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் இடைநிற்றல் 100 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் சுதாகர் துகாராம் மற்றும் பிபி சவுத்ரி ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார்.
அதில், தேசிய அளவில் 2015-16ம் ஆண்டில் மாணவர்கள் இடைநிற்றல் 8.1 விழுக்காடு இருந்த நிலையில், 2016-17ம் ஆண்டில் அது 10 விழுக்காடாக அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார். ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்திருப்பதாகவும், அதேநேரம், தமிழகத்தில் 9 மற்றும் 10 வகுப்புகளில் இடைநிற்றல் 100 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2015-16ம் ஆண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் 8 விழுக்காடாக இருந்த மாணவர்கள் இடைநிற்றல் விகிதம், 2017-18வது கல்வியாண்டில் 16.2 விழுக்காடாக அதிகரித்துவிட்டதாக அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கமளித்தார்.
ஏழ்மை நிலை, குடும்ப பொருளாதாரம், குழந்தைகள் உடல் ஊனத்தால் அவதிப்படுவது, பெற்றோர் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காதது போன்ற சூழ்நிலைகளால் மாணவர்கள் இடைநிற்றல் தொடர்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.