NEET & JEE தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு - திட்டமிட்ட நாளில் தேர்வு

NEET & JEE தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு - திட்டமிட்ட நாளில் தேர்வு

கோப்பு படம்

Neet & JEE Exam |நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.





    அப்போது, தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடும் என தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
    Published by:Sankar
    First published: