ஹோம் /நியூஸ் /கல்வி /

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று நடக்க இருந்த எஸ்.பி.ஐ தேர்வு தள்ளிவைப்பு!

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று நடக்க இருந்த எஸ்.பி.ஐ தேர்வு தள்ளிவைப்பு!

கோப்புப்படம்

கோப்புப்படம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று நடக்க இருந்த எஸ்.பி.ஐ கிளெர்க் மெயின் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

  தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான கேரளாவின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  இதேபோல, கர்நாடகாவிலும் கடலோரப்பகுதிகளில் கனமழை கொட்டிவருகின்றது. கேரளாவில் மட்டும் பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை சுமார் 30 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது.

  நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் விமானப்படையினரின் உதவியைக் கோரியுள்ளார் முதல்வர் பினராயி விஜயன்.

  இந்த நிலையில், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று நடக்க இருந்த எஸ்.பி.ஐ வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

  கர்நாடகாவின் பெல்காம், மஹாராஷ்டிராவின் கோல்ஹாபூர் மற்றும் கேரளா முழுவதும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீரில் பதற்றநிலை நீடிப்பதால் அங்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  Published by:Sankar
  First published:

  Tags: SBI