• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • எஸ்.பி.ஐ வங்கியின் CBO எழுத்துத்தேர்வு ரிசல்ட் வெளியீடு - ஆன்லைனில் ரிசல்ட்டை பார்க்கலாம்!

எஸ்.பி.ஐ வங்கியின் CBO எழுத்துத்தேர்வு ரிசல்ட் வெளியீடு - ஆன்லைனில் ரிசல்ட்டை பார்க்கலாம்!

எஸ்.பி.ஐ வங்கி

எஸ்.பி.ஐ வங்கி

SBI வங்கியின் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான (CBO) 3,850 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.

  • Share this:
எஸ்.பி.ஐ வங்கியின் வட்டார வளர்ச்சி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

SBI வங்கியின் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான (CBO) 3,850 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. ஆகஸ்ட் மாதம் வரை தேர்வர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்த காரணத்தால் தேர்வு தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், மத்திய, மாநில அரசுகளின் தீவிர கட்டுப்பாட்டு நடைமுறைகளால் கொரோனா பரவல் விகிதம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இதனையடுத்து நவம்பர் 28 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், அந்த எழுத்துத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவார்கள். பின்னர், 100 மதிப்பெண்கள் கொண்ட நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். கடைசியாக, தாங்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண்கள் பொறுத்து பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. எஸ்.பி.ஐ வங்கியின் CBO தேர்வை எழுதியிருப்பவர்கள் தங்களின் எழுத்துத் தேர்வு முடிவுகளை, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

SBI CBO result - ஐ தெரிந்துகொள்ளும் வழிமுறை :

Step 1: எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in என்ற பக்கத்துக்கு செல்ல வேண்டும்

Step 2: முகப்பு பக்கத்தின் மேல்மூளையின் இடதுபுறத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘Career’ என்ற டேப்-ஐ கிளிக் செய்ய வேண்டும்

Step 3: புதிய பக்கத்துக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு புதிய அறிவிப்புகள் (latest announcement section) என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். Recruitment of CBO என்ற ஆப்சனின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள ‘List of provisionally selected candidates for the interview’ என்ற ஆப்சனை தேர்தெடுக்க வேண்டும்

Step 4. அங்கு எஸ்.பி.ஐ வங்கியின் SBI CBO result என்பது pdf வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் தேர்தெடுக்கப்பட்ட நபர்களின் விவரம் roll number -உடன் கொடுக்கப்பட்டிருக்கும்

Step 4: கொடுக்கப்பட்ட தேர்வு முடிவில் உங்களின் ரோல் நம்பரை தேடுங்கள். நீங்கள் அடுத்த சுற்றுக்கு தேர்தெடுக்கப்பட்டிருந்தால் உங்களின் SBI CBO தேர்வு முடிவுகளை பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பதவிக்கு தேர்தெடுக்கப்படும் நபர்களுக்கு 6 மாதம் probation period எனப்படும் தகுதிகாண் காலம் வழங்கப்படும். பின்னர், CBO அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு, ஊதியமாக ரூ.23,700 முதல் ரூ.42,020 வரை வழங்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: