தமிழகத்தில் 1-5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விட அரசு பரிசீலித்து வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த தகவலில்," கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டது. இதன், காரணமாக அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாளாக செயல்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் சனிக்கிழமை நாட்களில் விடுமுறையை அறிவிக்க பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த, கோரிக்கையை ஏற்று 1-5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சனிக்கிழமையும் விடுமுறை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறாது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 6ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை நடைபெறும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல், மே31ம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே5ம் தேதி மேலு தொடங்கி மே28ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், 10 -1 2ம் வகுப்பு பொதுத் தேர்வில் நடத்தி முடிக்கப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறாது என்றும் கூறப்பட்டது.
10, 11, 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்ட அடிப்படையிலேயே பொதுத்தேர்வு - தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர்
இதர வகுப்புகளுக்கான தேர்வு தேதி குறித்தும் பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. 6-9ஆம் வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும்.
9ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மே 2 முதல் 4 வரை நடைபெறும். 6-9ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 30ம் தேதி வெளியிடப்படும்.
நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ஆம் தேதி ஆகும். 2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜுன் 13ஆம் தேதி தொடங்கும். அதேசமயம் 11ஆம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.