கணினி அறிவியல் படிக்க இருக்கிறேன் - பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி

கணினி அறிவியல் படிக்க இருக்கிறேன் - பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி

மாணவி சஸ்மிதா

பொறியல் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சென்னை சி.இ.ஜி கல்லூரியில் கணினி அறிவியல் படிக்க இருப்பதாகவும் மாணவி சஸ்மிதா தெரிவித்தார்.

 • Share this:
  பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இதில் கோவையைச் சேர்ந்த சஸ்மிதா என்ற மாணவி 199.67 மதிப்பெண் எடுத்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஹைதராபாத் மாநிலத்தில் 11, 12 வகுப்புகளைப் படித்த அவர், தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தரவரிசைப் பட்டியலில் முதல் மாணவியாக வருவேன் என எதிர்பார்க்கவில்லை எனவும் முதலிடம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் மாணவி சஸ்மிதா தெரிவித்தார்.

  Also read: எஸ்.பி.பி மரணத்துக்கு காரணம் என்ன? - மருத்துவமனை விளக்கம்  சென்னை சி.இ.ஜி கல்லூரியில் கணினி அறிவியல் படிக்க இருப்பதாகக் கூறிய அவர், நன்கு படித்து, நல்ல நிறுவனத்தில் பணிக்குச் சேரவேண்டும் என்பதே தனது குறிக்கோள் எனவும் தெரிவித்தார். தரவரிசையில் முதலிடம் பெற்ற மாணவி சஸ்மிதாவிற்கு குடும்பத்தினரும் நண்பர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
  Published by:Rizwan
  First published: