கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் - அரசு அதிரடி உத்தரவு

கோப்புப் படம்

கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் பொருட்டு அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

  • Share this:
கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை 10-ம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து மாணவியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 500 ரூபாயும், 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 1000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Also Read : கிராமங்களில் அங்கன்வாடி, தொடக்க பள்ளிகளை திறக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை

இந்த நிலையில் இந்த திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது.எனவே 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களின் விவரங்கள், பெற்றோர்களின் வங்கி கணக்கு விவரங்களை சேகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read : கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்-  அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

மேலும், பயனாளிகளுக்கு அவர்களின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கிலே இந்த ஊக்கத்தொகையை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: