முகப்பு /செய்தி /கல்வி / RTE | தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

RTE | தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

பெற்றோர்கள் https://rte.tnschools.gov.in/ என்ற ஆன்லைன் இணைய தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023- 24ம் கல்வியாண்டிற்கான கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை நடைமுறை வரும் மார்ச் 20ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி உரிமைச் சட்டம், 2009- ன் கீழ், தமிழ்நாட்டில் இயங்கும் சுயநிதி தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான, நிதியை தமிழ்நாடு அரசு தனியார் பள்ளிகளுக்கு விடுவித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும், இந்த சேர்க்கையின் கீழ் 74,283 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் பயனடைந்து உள்ளனர்.  

அந்த வகையில், 2023- 24ம் கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைமுறை வரும் மார்ச் 20ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. பெற்றோர்கள்  https://rte.tnschools.gov.in/ என்ற ஆன்லைன் இணைய தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இதற்கான, முழு ஆயத்தப் பணிகளில் பள்ளிக்கல்வித் துறை தயாராகி வருகிறது.

இந்நிலையில், தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம், தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், " தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளாக  25% இலவச சேர்க்கைக்கான கட்டணத்தை விடுக்க வில்லை. இந்நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு தயாராகி வருவது அதிரிச்சி அளிக்கிறது. எனவே, நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.         

First published:

Tags: RTE