ஹோம் /நியூஸ் /கல்வி /

அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்ட விண்ணப்ப எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது.

அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்ட விண்ணப்ப எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது.

அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்ட விண்ணப்பம்

அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்ட விண்ணப்பம்

RTE Education | நாடு முழுவதும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், சிறுபான்மையினர் அல்லாதோர் நடத்தக்கூடிய தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பில், அதாவது எல்கேஜி அல்லது முதலாம் வகுப்பில் ஏழை-எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் தங்களது குழந்தைகளை சேர்க்கலாம் .

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், கல்வி கட்டணம் இன்றி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மும்முரமாக நடந்து வருகிறது . இதுவரை 94  ஆயிரம் பேர் பதிவு செய்திருக்கின்றனர்.

நாடு முழுவதும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், சிறுபான்மையினர் அல்லாதோர் நடத்தக்கூடிய தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பில், அதாவது எல்கேஜி அல்லது முதலாம் வகுப்பில் ஏழை-எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் தங்களது குழந்தைகளை சேர்க்கலாம் . அதன்படி, ஆரம்ப நிலையில் உள்ள மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்களை ஏழை எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்களுக்கான ஆன்லைன் பதிவு நடந்து  வருகிறது.

www.rte.tn schools.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க கூடிய பெற்றோர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுகிறார்கள். மே மாதம் 18ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வரை 94  ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Education