தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 18 -ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு இன்று முதல் மே 18-ம் தேதி வரையில் இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 2013-14 ம் கல்வியாண்டு முதல் 2018-19 ம் கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் 2019-20 ம் கல்வியாண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி. அல்லது 1 ம் வகுப்பு) பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீதம் இடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பட உள்ளது.
இதில் விண்ணபிக்கும் மாணவர்களின் வசிப்பிடம் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும். தனியார் பள்ளியின் முக்கிய நுழைவு வாயிலில் 25 சதவிகித இட ஒதுக்கீடு குறித்த விளம்பரம் வைக்க வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட இடங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பெற்றோர்களும், பள்ளிகளும்
http://rte.tnschools.gov.in/tamil-nadu என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஏப்ரல் 22-ம் தேதியான இன்று முதல் மே 18 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also see... அப்பப்பா....! விர்ச்சுவல் ரியாலிட்டியில் மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியம்
Also see... ஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.