ரயில்வேயில் 10,000 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு

news18
Updated: May 21, 2018, 7:09 AM IST
ரயில்வேயில் 10,000 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு
கோப்புப் படம்
news18
Updated: May 21, 2018, 7:09 AM IST
ரயில்வே பாதுகாப்பு படையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 9,739 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்.) மற்றும் ரயில்வே சிறப்பு பாதுகாப்புப் படை ஆகியவற்றில் காலியாக உள்ள 9,739 இடங்களுக்கான ஆன் லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் முதல்  தேதி தொடங்குகிறது.

உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நான்கு நிலைகளில் நடத்தப்படுகிறது.


இந்த முறை மொத்த பணியிடங்களில் பாதி அளவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கான வயதுவரம்பு குறைந்தபட்சம் 18–ஆகவும், அதிகபட்சம் 25-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணமாக 40 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

எழுத்துத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அண்மையில் சுமார் 89 ஆயிரம் குரூப்-டி பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம்  வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: May 20, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...