புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக நடிகை ரோகிணி கையெழுத்து இயக்கம்

புதிய கல்விக் கொள்கையால் ஏழை எளிய மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள், குறிப்பாக முதல் தலைமுறை மாணவர்கள் மீண்டும் படிப்பறிவில்லாமல் வீட்டுக்கு அனுப்பப்படும் நிலை உள்ளது என்று  நடிகை ரோகிணி பேசினார்.

Web Desk | news18-tamil
Updated: July 31, 2019, 9:37 PM IST
புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக நடிகை ரோகிணி கையெழுத்து இயக்கம்
நடிகை ரோகிணி
Web Desk | news18-tamil
Updated: July 31, 2019, 9:37 PM IST
தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என நடிகை ரோகிணி கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு  போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் நடிகை ரோகிணி.

தொடர்ந்து  பேசிய நடிகை ரோகிணி, ”கல்வி கொள்கைக்கு எதிரான சூர்யாவின் பேச்சு இன்னும் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும்.


புதிய கல்விக் கொள்கையால் ஏழை எளிய மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள், குறிப்பாக முதல் தலைமுறை மாணவர்கள் மீண்டும் படிப்பறிவில்லாமல் வீட்டுக்கு அனுப்பப்படும் நிலை உள்ளது.

கல்வி கொள்கை குறித்து  மத்திய அரசு முழுமையாக கருத்து கேட்கவில்லை. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு மட்டும் இல்லாமல் அனைத்து மாநில அரசுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று  நடிகை ரோகிணி பேசினார்.

Also Watch: கடத்தப்பட்டாரா தமிழ் நடிகை?

Loading...

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...