Home /News /education /

10,12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வி துறை

10,12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வி துறை

பள்ளி தேர்வு - மாதிரிப்படம்

பள்ளி தேர்வு - மாதிரிப்படம்

Revision Test | 10, 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்ப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரவலை பொறுத்து கல்லூரி செமஸ்டர் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பள்ளிகளிலும் 1முதல் 9ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில் நேரடி வகுப்புகள் நடக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார்.

     

    Also Read : பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வா? நேரடி தேர்வா? - அமைச்சர் க.பொன்முடி பதில்

    இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி தொடங்கும் திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் முறையான வழிகாட்டுதல்களின் படி மாணவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படமால் தேர்வினை நடத்த பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Exam

    அடுத்த செய்தி