• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து தகவல்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு  உள்ள தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • Share this:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 2-ம் தேதி துவங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. கொரோனா
ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு மே 27-ம் தேதி துவங்கி ஜூன் 9-ம் தேதி நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன்  தெரிவித்திருந்தார்.

Also read... 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடப் பகுதிகள் குறைப்பு - பள்ளிக் கல்வித்துறை முடிவு

இந்த நிலையில் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து இன்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதனடிப்படையில் வரும் ஜூலை 6ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: