Home /News /education /

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமைகளின் கீழ் வராது - உச்சநீதிமன்றம்

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமைகளின் கீழ் வராது - உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பில், ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுகிறது. ஆனால் மருத்துவப்படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கும் இடங்களில் இந்த முறை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.இதனால், ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை.

    இதனை எதிர்த்து, அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக,, மதிமுக கட்சிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இன்று இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    முதன்மை மனுதாரரான திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், இட ஒதுக்கீடு என்பது மாணவர்களின் அடிப்படை உரிமை என்று வாதிட்டார்.

    தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டையே, மருத்துவப் படிப்பில் அமல்படுத்தக் கேட்பதாகவும், புதிதாக இட ஒதுக்கீடு கோரவில்லை என்றும் வில்சன் கூறினார்.

    அதனை கேட்ட நீதிபதிகள், இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமைகளின் கீழ் வராது என்றும் எனவே தங்களால் தலையிட முடியாது என்றும் கூறினர்.

    இதற்கு அதிருப்தி தெரிவித்த வழக்கறிஞர் வில்சன், மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி பிரிவுக்கு 8 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு தரவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

    அதனை தொடர்ந்து, தமிழகத்தின் அரசியல் கட்சிகள் ஒண்றிணைந்து ஒரே பிரச்சனைக்காக குரல் கொடுப்பதை பார்க்க மிகழ்ச்சியாக இருப்பதாக கூறிய நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 226-ன் கீழ் உயர் நீதிமன்றதை நாடி இட ஒதுக்கீடு தொடர்பாக மனுக்களை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர்.

     







    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    Published by:Yuvaraj V
    First published:

    Tags: OBC Reservation

    அடுத்த செய்தி