அகில இந்திய கோட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 24 எம்பிபிஎஸ் இடங்களை மாநில கோட்டாவுக்கு திருப்பி தரும்படி தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவ சேர்க்கைக்கு ஏப்ரல் 11ம் தேதி கடைசி நாளாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய கோட்டாவில் 24 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை மாநில கோட்டாவுக்கு திருப்பி தர சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபி எஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15% அகில இந்திய கோட்டாவுக்கு வழங்கப்படும். அதாவது இந்தாண்டு 812 இடங்கள் அகில இந்திய கோட்டாவுக்கு தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்பட்டன.
வழக்கமாக இரண்டு கட்ட கலந்தாய்வுக்கு பின் அகில இந்திய கோட்டாவில் மீதமுள்ள இடங்கள் மாநில கோட்டாவுக்கு திருப்பி தரப்படும். அந்த இடங்களையும் சேர்ந்து மாநில கலந்தாய்வு நடைபெறும்.
CBSE Class 10th Exam: சிபிஎஸ்இ அறிவியல் பாடத்துக்கான வினா வங்கி வெளியானது
ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக நான்கு கட்ட கலந்தாய்வை மத்திய சுகாதாரத்துறை நடத்தியது. நான்கு கட்டங்களுக்கும் பிறகும் தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகள் 24 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை மாநில கோட்டாவுக்கு வழங்க முடியாது என நீதிமன்றம் மூலம் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவ சேர்க்கைக்கு ஏப்ரல் 11ம் தேதி கடைசி தேதி என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போதும் இந்த இடங்கள் காலியாக உள்ளன. எனவே இந்த இடங்களை மாநில கோட்டாவுக்கு திருப்பி தர வலியுறுத்தி சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் ஏப்ரல் 11ம் தேதி நிலவரப்படி மாநில கோட்டாவில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நான்கு இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 14 இடங்களும் காலியாக உள்ளன.
மருத்துவ சேர்க்கைக்கான கடைசி தேதி முடிந்திருந்தாலும் இந்த இடங்கள் வீணாகக் கூடாது என்பதால் இந்த 18 இடங்களை நிரப்பி கொள்ள கலந்தாய்வு நடத்தவும் மத்திய சுகாதாரத்துறையிடம் சுகாதாரத்துறை செயலர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MBBS