நீட் முதுநிலை தேர்வு இந்த ஆண்டு மே 21ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் 2021ம் ஆண்டுக்கான நீட் முதுநிலை கலந்தாய்வே இன்னமும் சில மாநிலங்களில் நடைபெற்று முடியாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தேர்வை நடத்தக் கூடாது என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. சில மாநிலங்களில் 2022 முதுநிலை தேர்வும் 2021 கலந்தாய்வும் ஒரே தேதியில் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க மாநில தலைவர் கீர்த்தி வர்மன் கூறுகையில், கலந்தாய்வு நடைபெற்று முடியாததால் அதில் கலந்து கொள்ளும் மருத்துவர்கள் அடுத்த நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பார்கள். கலந்தாய்வில் இடம் கிடைக்காவிட்டால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க கூட நேரம் இல்லை.
மேலும் கேரளா, ஜம்மு காஷ்மீர் , பீகார் மாநிலங்களில் பயிற்சி மருத்துவர்களுக்கு முதுநிலை தேர்வு எழுத அனுமதி வழங்கவில்லை. இதையும் திருத்தி அவர்களுக்கும் அனுமதி அளித்து நீட் முதுநிலை தேர்வு நடத்த வேண்டும். அகில இந்திய கோட்டாவில் இரண்டு சுற்று கலந்தாய்வுக்கு பின், மீதமுள்ள இடங்கள் மாநிலத்திடம் ஒப்படைக்கப்படும்.
Also Read :
முழுநேர முனைவர் பட்டம்: ரூ.1 லட்சம் கல்வி ஊக்கத்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஆனால் இந்த ஆண்டு அதற்கு அடுத்த mop up சுற்றுகளையும் மத்திய அரசே நடத்துவதால் தான் கலந்தாய்வு இந்த ஆண்டு தாமதமாக நடைபெற்று அடுத்த தேர்வு வரும் வரை நடைபெறுகிறது. எனவே அகில இந்திய கோட்டாவில் இரண்டு சுற்றுகளுக்கு பிறகு மீதமுள்ள இடங்களை மாநிலத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.