பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் பாடப்புத்தகம், எழுதுபொருள், புத்தகப்பை, சைக்கிள் ஆகியவற்றில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வராக இருந்த பழனிச்சாமி ஆகியோரது புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அவற்றை கிடப்பில் போடாமல், மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்க கோரி நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்துல் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவர் மனுவில், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு இருப்பதனால், அவற்றை விநியோகிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டு அரசுகளுக்கு இடையேயான அரசியல் நிலை வேறுபாட்டால் பொது மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி படங்கள் அச்சிடப்பட்ட பொருட்களை தேக்கி வைக்காமல் மாணவர்களுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஆச்சிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் படிக்க... கொங்கு நாடு கோரிக்கை: அக்கறையா, அரசியலா?
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 13, 2021 11)
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணையை நான்கு வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, School books