CENTA அமைப்புடன் இணைந்து ஆசிரியர்களை கெளரவிக்கும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

ஆசிரியர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கவும் ரிலையன்ஸ் அறக்கட்டளை உறுதி பூண்டுள்ளது என்கிறார் ஈஷா அம்பானி.

CENTA அமைப்புடன் இணைந்து ஆசிரியர்களை கெளரவிக்கும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!
ஆசிரியர்களை கவுரவிக்கிறது ரிலையன்ஸ் அறக்கட்டளை
  • News18
  • Last Updated: November 22, 2018, 10:17 PM IST
  • Share this:
நாட்டில் கற்பிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு ரிலையன்ஸ் அறக்கட்டளை, சென்டா (சென்டர் ஃபார் டீச்சர் அக்ரிடிடேஷன்) (Centre for Teacher Accreditation - CENTA)  என்னும் அமைப்புடன் நீண்ட காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சென்டா அமைப்பு, தனியார் துறை பள்ளி ஆசிரியர்களை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

கடந்த 2014-ல் தொடங்கப்பட்ட சென்டா அமைப்பில் கிராமம், நகரம், மாநகரம் உள்ளிட்ட நாட்டின் 2,000 இடங்களைச் சேர்ந்த சுமார் 50,000 ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள 5,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளும் சென்டா அமைப்பில் இணைந்துள்ளன.


இந்த அமைப்பு கடந்த 3 ஆண்டுகளாக டீச்சிங் புரஃபஷனல்ஸ் ஒலிம்பியாட் (Teaching Professionals’ Olympiad - TPO) சுருக்கமாக டீபிஓ எனப்படும் ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான போட்டியை நடத்தி வருகிறது. தற்போது 4-வது முறையாக இந்தப் போட்டி டிசம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது. நாட்டின் 46 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி என மொத்தம் 48 இடங்களில் இப்போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியின் முதன்மை ஸ்பான்சராக ரிலையன்ஸ் அறக்கட்டளை மாறியுள்ளது. இதன்படி இப்போட்டியில் வெல்லும் 1,000 பேருக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுடன் ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.

இதுகுறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ஈஷா அம்பானி கூறுகையில், ‘ஆசிரியர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கவும் ரிலையன்ஸ் அறக்கட்டளை உறுதி பூண்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
First published: November 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்